தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைக்கும்: அன்புமணி ராமதாஸ்
மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. மற்றும் பொது சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து
2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க.கட்சி ஆட்சி அமைக்கும் என சிறையில் இருக்கும் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் இன்று நம்பிக்கை தெரிவித்தார்.
மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. மற்றும் பொது சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக பா.ம.க.வினரை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க.நிர்வாகிகள் குடும்பத்தினரை அக்கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். இந்நிலையில் இன்று திருத்தணி அடுத்துள்ள கே.ஜி.கண்டிகை பகுதியை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி பொன்னுசாமி என்பவர் வீட்டிற்க்கு சென்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் வரவேற்றனர்.
பின்னர் பொன்னுசாமி வீட்டிற்க்கு சென்று கட்சியின் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் நதியுதிவி மற்றும் பொருட்களை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் அவர் பேசும்போது: பா.ம.க. வளர்ச்சியை தடுக்கவே அதிமுக அரசு பா.ம.க.வினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். வன்னியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பா.ம.க. ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 46 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றியது வருகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு பா.ம.க. கட்சி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Advertisement
நிகழ்ச்சியின்போது கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை தலைவர் பாலயோகி, முன்னாள் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. ரவிராஜ், ஒன்றிய செயலாளர் பொன்ஜோதி குமார், நிர்வாகிகள் திருவேங்கடம், தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.