பிகாரில் பாஜக எம்எல்ஏ அமர்நாத் இடைநீக்கம்
இதுகுறித்து மங்கல் பாண்டே கூறுகையில், ""அமைச்சரவையில் இடம் தருவதாகவும், சட்டப்பேரவைக் கவுன்சில் தேர்தலில் உறவினர்களுக்கு இடம் தருவதாகவும் வாக்குறுதிகளைக் கொடுத்து பாஜக எம்எல்ஏக்களை
பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. அமர்நாத் கமியை அக்கட்சி இடை நீக்கம் செய்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் சஞ்சய் மயுக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக தர்பங்கா மாவட்டம் ஹயாகத் சட்டப்பேரவை உறுப்பினர் அமர்நாத் கமியை கட்சித் தலைவர் மங்கல் பாண்டே இடை நீக்கம் செய்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மங்கல் பாண்டே கூறுகையில், ""அமைச்சரவையில் இடம் தருவதாகவும், சட்டப்பேரவைக் கவுன்சில் தேர்தலில் உறவினர்களுக்கு இடம் தருவதாகவும் வாக்குறுதிகளைக் கொடுத்து பாஜக எம்எல்ஏக்களை ஐக்கிய ஜனதா தளம் தங்கள் பக்கம் இழுத்து வருகிறது'' என குற்றம் சாட்டினார்.பிகாரில் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. இந்நிலையில், பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த ஐக்கிய ஜனதா தளம் விலகியது. அத்துடன், முதல்வர் நிதீஷ் குமார் பாஜக அமைச்சரகளை பதவி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement