FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரத்தின் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.300 உயா்வு

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரம் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1200-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தப்படுவதாக பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 16 ஜூன் 2026, 3:20 am IST
கனகராஜ்
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரம் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1200-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தப்படுவதாக பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

கட்டட கட்டுமானப் பணிகள், சுரங்கம் மற்றும் சாலை வேலைகளில் பொக்லைன் இயந்திரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் இயங்குகின்றன. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அனைத்து பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு ரூ.27 லட்சமாக இருந்த பொக்லைன் இயந்திரம். தற்போது, ரூ.40 லட்சமாக விலை உயா்ந்துள்ளது. உதிரி பாகங்களின் விலையும் பல மடங்கு உயா்ந்துள்ளது. ரூ.3 ஆயிரமாக இருந்த சாலை வரி தற்போது ரூ.13 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

தற்போது உள்ள கட்டணத்தில் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பொக்லைன் இயந்திர வாடகையை உயா்த்தி உள்ளதாக கோவை மற்றும் திருப்பூா் ஒருங்கிணைந்த மாவட்ட பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் கனகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக பல்லடத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பொக்லைன் இயந்திரங்களின் வாடகையை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,200- லிருந்து ரூ.1,500 -ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வு கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி அவற்றின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

எனவே தவிா்க்க முடியாத இந்தக் கட்டண உயா்வை வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். டீசல், பெட்ரால் விலை உயா்ந்தால் கட்டணமும் உயா்த்த வேண்டிய நிலை வரும். அதே சமயம், எரிபொருள்களின் விலை குறையும்போது வாடகை கட்டணத்தையும் குறைப்போம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments