ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு சர்தார் சிங் கேப்டன்
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக 18 பேர் கொண்ட இந்திய
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள இளம் இந்திய அணிக்கு சர்தார் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கடந்த 25 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற பயிற்சி முகாமின் அடிப்படையில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முன்னணி முன்கள வீரர்களான டேனிஸ் முஜ்தபா, எஸ்.வி.சுனில், குருவிந்தர் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகிவிட்ட நிலையில், ரமன்தீப் சிங், நிகின் திம்மையா, நிதின் திம்மையா, மன்தீப் சிங், மாலக் சிங் ஆகிய 5 இளம் முன்கள வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் தடுப்பாட்டக்காரர் அமித் ரோஹிதாஸ், நடுகள வீரர் எஸ்.கே.உத்தப்பா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Advertisement
ஆசிய கோப்பை போட்டிக்காக இந்திய அணி வரும் 16-ம் தேதி மலேசியா செல்கிறது. "பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் (ஆக.24) ஓமனையும், 2-வது ஆட்டத்தில் (ஆக.26) கொரியாவையும், 3-வது ஆட்டத்தில் (ஆக.28) வங்கதேசத்தையும் சந்திக்கிறது.