ஆப்கானிஸ்தானில் கடும் மழைக்கு 22 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.அதில் ஏராளமான வீடுகள்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.அதில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த மழை-வெள்ளத்துக்கு 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.