முகப்பு
தமிழ்நாடு

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு பற்றி...

Updated On : 15 ஜூன் 2026, 11:05 am IST
விஜய் - சங்கீதா - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் ஜோசப் விஜய், அவரது மனைவியின் விவாகரத்து வழக்கில் இருவரும் காணொலி மூலம் ஆஜராக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தோ்தலில் வென்று முதல்வராக பதவியேற்றுள்ளாா். அவரது மனைவி சங்கீதா, கடந்த 2025 டிசம்பர் 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வழங்கவும், நிரந்த ஜீவனாம்சம் வழங்கவும் மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்போது, வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது தான் விஜய் - சங்கீதா விவாகரத்து விவரமே வெளியில் தெரியவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20 இல் விசாரணைக்கு வந்தது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த விஜய் மற்றும் சங்கீதா தரப்பினர் யாரும் ஆஜராகாத நிலையில், இருதரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மே 19 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, இரு தரப்பினரும் அவரவா்களது வழக்குரைஞா்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனுவாக தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், விவாகரத்து வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சுஜாதா, காணொலி மூலம் விசாரணை நடத்த முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், வக்காலத்து தாக்கல் செய்யப்படாதது குறித்து சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி சுஜாதா, மனுதாரர், எதிர் மனுதாரரின் மின்னஞ்சல் முகவரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

summary

No video hearing for divorce case: Chief Minister Vijay's request rejected

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.