கோயில்களில் கட்டண தரிசன முறை மாற்றப்படுமா? முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை
தமிழக கோயில்களில் கட்டண தரிசன முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பல்வேறு துறை அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று அறநிலையத் துறை அமைச்சர் உள்ட்டோருடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் கட்டண தரிசன முறையில் மாற்றம் கொண்டு வரப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது, பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள், தோரோட்ட நிகழ்வுகளின் போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, கோயில்களில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பது போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Will the paid darshan system in temples be changed? Consultation led by Chief Minister Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.