ஆர்டிஐ சட்ட திருத்த மசோதா: மக்களவையில் நாளை தாக்கல்
அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மக்களவையில் நாளை(திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த மசோதாவை மத்திய
அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மக்களவையில் நாளை(திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த மசோதாவை மத்திய பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய இணையமைச்சர் வி.நாரயணசாமி தாக்கல் செய்ய உள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் (இந்திய மற்றும் மார்க்சிஸ்ட்) மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய 6 கட்சிகளை கொண்டு வர மத்திய தவல்கள் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.இக்கட்சியினர் மத்திய அரசிடமிருந்து மறைமுகமான முறையில் நிதி பெறுவதால், அக்கட்சிகள் பொது தகவல் அலுவலரை நியமிக்க வேண்டும். எனவே, அக்கட்சிகள் ஆர்டிஐ சட்டத்துக்குள் வரும் என்று தகவல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஆர்டிஐ-யை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியே இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இறுதியில், ஆர்டிஐயில் திருத்தம் கொண்டு வர மத்திய பணியாளர் துறை முடிவு செய்தது. பின்னர், சட்ட அமைச்சகம் மற்றும் பிற அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இதைத் தொடர்ந்து ஆர்டிஐ சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 1-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
Advertisement
Advertisement