முகப்பு
தற்போதைய செய்திகள்

நாங்கள் மோடியைப் பார்த்து பயப்படவில்லை: திக்விஜய் சிங்

நாங்கள் மோடியைப் பார்த்து பயப்படவில்லை. அவர் எங்கெல்லாம் பிரசாரம் செய்யச் சென்றாரோ அங்கெல்லாம் பா.ஜ.க. தோல்வியையே தழுவியது.ஹைதாராபாதில் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து

Updated On : 11 ஆகஸ்ட் 2013, 6:49 pm IST
பகிர்:

நாங்கள் மோடியைப் பார்த்து பயப்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம சாகரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த திக்விஜய் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் மோடியைப் பார்த்து பயப்படவில்லை. அவர் எங்கெல்லாம் பிரசாரம் செய்யச் சென்றாரோ அங்கெல்லாம் பா.ஜ.க. தோல்வியையே தழுவியது.ஹைதாராபாதில் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களிடம் ரூ.5 பெற்று முன்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பே போலிதான். இதற்கான கட்டணத்தை மக்களிடம் வாங்காமல் பா.ஜ.க.வே செலுத்திவிடும். கூட்டம் முடிந்த பிறகு, ஏராளமானோர் அதில் கலந்து கொண்டதாக அக்கட்சி கூறிக் கொள்ளும். முறைகேடு செய்வதில் அவர்கள் வல்லவர்கள்.

Advertisement

Advertisement

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தொப்பி அணிந்தது குறித்துக் கேட்கிறீர்கள். அவர் சிவப்புத் தொப்பி அல்லது கருப்புத் தொப்பி அணிவது பற்றி காங்கிரசுக்குக் கவலையில்லை. அது அவரைப் பொறுத்தது. பின்தங்கிய பிராந்தியங்களுக்கான மானியத் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அடங்கும் புந்தேல்கண்ட் பகுதிக்கு மத்திய அரசு சிறப்பு நிதியுதவித் திட்டத்தை அறிவித்தது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் முன்முயற்சி காரணமாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் இத்திட்ட அமலாக்கத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது.

நான் மீண்டும் மத்தியப் பிரதேச முதல்வராக வர விரும்பவில்லை. ஏனெனில், தேசிய விவகாரங்களில் கவனம் செலுத்தவே நான் விரும்புகிறேன். ஆனால், மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக நான் இங்கு உழைத்து வருகிறேன் என்றார் திக்விஜய் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.