முகப்பு
தற்போதைய செய்திகள்

வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை: பிகார் அமைச்சர்களுக்கு ஐக்கிய ஜனதா தளம் விளக்கம் கேட்டு கடிதம்

கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில், ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்த இரண்டு பிகார் அமைச்சர்களுக்கு, அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை

Updated On : 11 ஆகஸ்ட் 2013, 3:50 pm IST
பகிர்:

கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில், ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்த இரண்டு பிகார் அமைச்சர்களுக்கு, அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

பிகார் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பீம் சிங், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் அகியோருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில், வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இரு அமைச்சர்களும் தெரிவித்திருந்த கருத்துக்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இருவர் மீதும் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை ஏழு நாட்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சர்களின் அறிக்கைகள் கட்சிக்கு தர்மசங்டத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, கட்சியின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீம் சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் என்ற வகையிலும், மாநில அமைச்சர் என்ற வகையிலும் எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் குறித்த கருத்து தேவையற்றது என்று சரத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.