முகப்பு
தற்போதைய செய்திகள்

முஸாபர்நகர் வன்முறையின் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் : ஷிண்டே

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளே உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Updated On : 11 செப்டம்பர் 2013, 12:24 pm IST
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளே உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

முஸாபர் நகரில் நடந்த வன்முறைக்குப் பின்னால் ஒரு சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியே காரணமாக உள்ளது என்று புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷில் குமார் கூறினார்.

முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அங்கு ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.