முகப்பு
தற்போதைய செய்திகள்

 தந்தை திட்டியதால் கல்லூரி மாணவர் தற்கொலை

திருவள்ளூர் ஆசூரி தெருவில் வசித்து வருபவர் மோகன் (54). இவர் மந்தைவெளியில் உள்ள கூட்டுறவுத் துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன்

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 2:56 pm IST
பகிர்:

திருவள்ளூரில் கல்லூரிக்கு சரிவர செல்வதில்லை என்றும், தேர்வுகளில் அரியஸ் வருகிறதென்றும் தந்தை திட்டியதால் கல்லூரி மாணவர் இன்று தற்கொலை செய்துக் கொண்டார்.

திருவள்ளூர் ஆசூரி தெருவில் வசித்து வருபவர் மோகன் (54). இவர் மந்தைவெளியில் உள்ள கூட்டுறவுத் துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிரசன்னவெங்கடேஷ் (20). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பிரசன்ன வெங்கடேஷ் சரிவர கல்லூரிக்குச் செல்வதில்லை எனவும், 2 ஆண்டு தேர்வுகளிலும் அரியஸ் வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இதையொட்டி தந்தை மோகன் அடிக்கடி தனது மகனை திட்டியுள்ளார். அதே போல் இன்று காலையும் திட்டியதால் தனி அறைக்குச் சென்ற பிரசன்ன வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தந்தை மோகன் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.