தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற தமிழகத் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை
தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற வேண்டியும், தமிழ் வழிக்கல்வியையே முழுமையாக தொடர வேண்டும் எனவும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற வேண்டியும், தமிழ் வழிக்கல்வியையே முழுமையாக தொடர வேண்டும் எனவும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வாயிலில் தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் திருவள்ளூவன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் முனுசாமி வரவேற்றார். மாவட்ட மதிப்பியல் தலைவர் ராசமாணிக்கனார் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்டச் செயலாளர் கு.சம்மந்தம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் தமிழக அரசு உடனடியாக தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வையாபுரி, பிச்சாண்டி, சங்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.