சரக்கு வேன் மோதி ஒருவர் பலி
கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.குலாம்(50).இவர் கோட்டைப்பட்டினத்தில் வாடகை பாத்திரக் கடை தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் ஜெகதாப்பட்டினத்திற்கு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே சரக்கு வேன் மோதியதில் வெள்ளிக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.
கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.குலாம்(50).இவர் கோட்டைப்பட்டினத்தில் வாடகை பாத்திரக் கடை தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் ஜெகதாப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார்.ஜெகதாப்பட்டினம் பள்ளிக்கூடம் அருகே சென்றபோது,பின்னால் வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியுள்ளது.இதில் பலத்த காயம் அடைந்த குலாம் மணமேல்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜெகதாப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொடிக்குளத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் மு.ராஜேஷ் கண்ணாவை(29) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.