முகப்பு
தமிழ்நாடு

தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை ஒடுக்கலாம் என அரசு நினைக்கிறது! - கனிமொழி கண்டனம்!

திமுக ஜென்ஸீ குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனைக் கைது செய்ய முயன்றதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம்...

Updated On : 24 ஜூன் 2026, 6:16 pm IST
முதல்வர் விஜய் | திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்
பகிர்:

திமுக ஜென்-ஸீ குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை நள்ளிரவில் காவல் துறையினர் கைது செய்ய முயன்றதற்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதை விமர்சித்து திமுக ஜென் - ஸீ குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து, நேற்று (ஜூன் 23) நள்ளிரவு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது வீட்டில் காவல் துறையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்ய முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என தவெக அரசு நினைப்பதாகக் கூறி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,

“ தி.மு.க-வின் ஜென் - ஸீ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.

தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

DMK MP Kanimozhi has condemned the police attempt to arrest the coordinator of the DMK's Gen-Z wing, at midnight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments