முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜகவின் ஒரே நோக்கம் நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குவதுதான்: ராஜீவ் சுக்லா

2004-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்கை பதவி விலக வேண்டும் என்று பாஜக 180 முறை கூறியுள்ளது. அவர்களின் வலியுறுத்தலுக்கு உடன்பட்டிருந்தால், கடந்த 9 ஆண்டுகளில் இந்த நாடு 180 பிரதமரைச் சந்தித்திருக்கும். பாஜகவின் ஒரே நோக்கம், நாடாளுமன்ற செயல்பாடுகளை

Updated On : 12 மே 2013, 6:07 pm IST
பகிர்:

பிரதமர் மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் பாஜகவுக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராஜீவ் சுக்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2004-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்கை பதவி விலக வேண்டும் என்று பாஜக 180 முறை கூறியுள்ளது. அவர்களின் வலியுறுத்தலுக்கு உடன்பட்டிருந்தால், கடந்த 9 ஆண்டுகளில் இந்த நாடு 180 பிரதமரைச் சந்தித்திருக்கும். பாஜகவின் ஒரே நோக்கம், நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குவதுதான். அவர்கள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தனது பேச்சினால் நாடு முழுவதும் பிரபலமானவர் என்று தெரிவித்தார்.முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், "நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சிபிஐயின் அறிக்கையில் அஸ்வனி குமார் எந்த மாற்றமும் செய்யவில்லை. அறிக்கையில் இருந்த எழுத்துப் பிழைகளைத் தான் சரி செய்தார் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.