முகப்பு
தற்போதைய செய்திகள்

பா.ம.க. செயலாளர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யபட்டதை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் பஸ் எரிப்பு, பஸ்மீது கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், வாலாஜா அடுத்த பெரியதகர குப்பம் கிராமத்தை சேர்ந்த

Updated On : 12 மே 2013, 2:30 pm IST
பகிர்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யபட்டதை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் பஸ் எரிப்பு, பஸ்மீது கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், வாலாஜா அடுத்த பெரியதகர குப்பம் கிராமத்தை சேர்ந்த கரிகாலன், மேல்வேலத்தை சேர்ந்த பிச்சாண்டி ஆகியோர் கைது செய்யபட்டு வேலூர் சிறையில் அடைக்கபட்டனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் கலெக்டர் சங்கருக்கு பரிந்துரை செய்தார்.இதன்படி கலெக்டர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து குண்டர் சட்ட கைது நகல் வேலூர் சிறையில் உள்ள 3 பேரிடமும் இன்று வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.