ராகுலுக்கு இலவசமாக நாளிதழ் அளித்த சிறுவனை காங்கிரஸ் தத்தெடுத்தது
கடந்த மாதம் 25-ம் தேதி போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அனுகிய சிறுவன் நாளிதழ் வாங்கும்படி கேட்டுக்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு இலவசமாக நாளிதழ் அளித்த 10 வயது சிறுவன் கெüசல் ஷக்யாவை மத்தியப் பிரதேச காங்கிரஸ் தத்தெடுத்தது.
கடந்த மாதம் 25-ம் தேதி போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அனுகிய சிறுவன் நாளிதழ் வாங்கும்படி கேட்டுக் கொண்டான்.நாளிதழ் வாங்கிக் கொண்டு, அதற்குக் கட்டணமாக ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார் ராகுல்.அதற்கு அச்சிறுவன், தன்னிடம் சில்லறை இல்லை என்றும் அதனால் நாளிதழை இலவசமாக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.இதில் நெகிழந்துபோன ராகுல் காந்தி அச்சிறுவனிடம் சிறிது நேரம் உரையாடினார்.அப்போது எதிர்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய் என்று கேட்டதற்கு, நான் மருத்துவராவேன் என்று சிறுவன் பதில் அளித்துள்ளான். பின்னர் சிறுவனை வாழ்த்தி விட்டு அங்கிருந்து ராகுல் சென்று விட்டார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியா அச்சிறுவனையும், அவனது தந்தையையும் போபாலில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை சந்தித்தார்.அப்போது சிறுவனை பாராட்டிய பூரியா, ஷக்யாவை காங்கிரஸ் தத்தெடுப்பதாக அறிவித்தார். சிறுவனின் படிப்புக்காக மாதாமாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். சிறுவனின் தந்தை துலிசந்த் ஷக்யாவுக்கு தனது கல்லூரியில் பணியாள் வேலை தருவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சஜீத் அலி தெரிவித்தார்.
Advertisement
Advertisement