முகப்பு
தற்போதைய செய்திகள்

50 சதவீத குடிநீர் கட்டணம் உயர்வு: மார்க்சிய கம்யூனிஸ்டு.போராட்டம்

அபிராமம் பேரூராட்சியில் மாதம் தோறும் வீடுகளுக்கு குடி நீர் சப்ளைக்காக ரூ.50 வசூலிக்க்பபட்டு வந்ததாம். ஆனால் தற்போது குடி நீர் கட்டணத்தை ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக அபிராமம் பேரூராட்சி உயர்த்தி வசூலித்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், குடிநீர் கட்டணத்தை குறைக்க

Updated On : 12 மே 2013, 3:00 pm IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் குடி நீர் கடடணம், 50 சதவீத உயர்விற்கு, மார்க் சிய கம்யூனிஸ்டு சார்பில் கண்டனம் தெரிவித்து, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.   

அபிராமம் பேரூராட்சியில் மாதம் தோறும் வீடுகளுக்கு குடி நீர் சப்ளைக்காக ரூ.50 வசூலிக்க்பபட்டு வந்ததாம். ஆனால் தற்போது குடி நீர் கட்டணத்தை ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக அபிராமம் பேரூராட்சி உயர்த்தி வசூலித்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், குடிநீர் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ராஜாராமிடம் கமுதி தாலுகா செயலர் ஆர்.முத்து விஜயன், அபிராமம் நிர்வாகிகள் முனியசாமி, வீரையா ஆகியோயோர் மனு கொடுத்தனர். 

அபிராமத்தில் குடி நீர் வினியோகம் தடையின்றி செயல்படவும் அவர்கள் வலியுறுத்தினர். குடிநீர் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.