காவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி சென்னை பார் அசோசியேஷன் பிரதமர் மோடிக்கு கடிதம்
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி பிரதமர் மோடி மற்றும் நீர்வளத்துறை
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி பிரதமர் மோடி மற்றும் நீர்வளத்துறை செயலருக்கு சென்னை பார் அசோசியேஷன் கடிதம் எழுதியுள்ளது.
1956 ஆம் ஆண்டின் ”மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தில், “சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு: 6A(2)ன்படி, “ஸ்கீம்” என்பது “ஆணையம்” (Authority) என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, “ஆணையம்” என்பதை உள்ளடக்கிய ஸ்கீம் உருவாக்க வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் மத்திய அரசுக்கு இட்டிருக்கும் கட்டளை எனவே தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.