கோவையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை
கோவையில் ஆயுதப்படை காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த அமர்நாத் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள
கோவை: கோவையில் ஆயுதப்படை காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த அமர்நாத் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் காவல்துறையை சேர்ந்தவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் அமர்நாத் (25). இவர் கோவை மாவட்டம் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக கடந்த 2016-ஆம் ஆண்டில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று பணி முடிந்து தனது அறைக்கு சென்றவர் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இன்று காலை தூங்கில் தொங்கிய நிலையில் அமர்நாத்தை பார்த்த சக போலீஸ்காரர்கள் உயர் அதிகாரிகளுக்கும், குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அமர்நாத் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அமர்நாத் தற்கொலைக்கு பணி சுமையா அல்லது தனிப்பட்ட பிரச்னை காரணமா என்றும் திருமணமாகாதவர் என்பதால் காதல் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
தமிழகத்தில் சில மாதங்களாக காவல்துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொண்டு வரும் சமபவம் அனைவரும் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.