முகப்பு
தற்போதைய செய்திகள்

பசுவின் கோமியம் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்: மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே 

பசுவின் கோமியம் விரைவில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துப்பொருளாக அறவிக்கப்படும். அதற்கான ஆய்வு தொடர்ந்து நடந்து

Updated On : 8 செப்டம்பர் 2019, 10:12 am IST
பகிர்:


கோவை: பசுவின் கோமியம் விரைவில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துப்பொருளாக அறவிக்கப்படும். அதற்கான ஆய்வு தொடர்ந்து நடந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ராய்ச்சி அஸ்வினிகுமார் செளபே தெரிவித்துள்ளார். 

கோவை தனியார் மருத்துவணையில் அதிநவீன புற்றுநோய்க்கான சிகிச்சை கருவிகளை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பசுவின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால் இதனை புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துப்பொருளாக அறிவிக்கப்படும். அதற்கான ஆய்வு தொடர்ந்து நடந்து வருவதாகவும், விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

Advertisement

Advertisement

மேலும், மதுரை, தோப்பூரில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல் கட்டப் பணிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளை 45 மாதங்களில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.