முகப்பு
தற்போதைய செய்திகள்

திண்டுக்கல்: தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு

சோதனையில் ஈடுபட்ட கன்னிவாடி காவல் நிலைய தலைமைக் காவலரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வெட்டியுள்ளார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2020, 5:48 pm IST
தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு (கோப்புப்படம்)
பகிர்:

திண்டுக்கல் : சோதனையில் ஈடுபட்ட கன்னிவாடி காவல் நிலைய தலைமைக் காவலரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வெட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி காவல் நிலையம் முன்பு காவலர்கள் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவலர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில்,  ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் திருப்பதி என்பவரை தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பலத்த காயமடைந்த தலைமைக் காவலர் திருப்பதி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments