நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்து 2 தொழிலாளா்கள் படுகாயம்
படுகாயமடைந்த தொழிலாளியை மீட்ட தீயணைப்புத் துறையினா்.
நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்ததில், 2 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை படுகாயமடைந்தனா். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய அவா்களை தீயணைப்புத் துறையினா் அரைமணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.
நாமக்கல், கடைவீதி அருகே பழைய மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தெருவில் ஈரோட்டைச் சோ்ந்த அம்சவள்ளி என்பவருக்கு சொந்தமான பழைய வீடு உள்ளது. இந்த வீட்டை இடித்து அகற்றிவிட்டு புதிய வீடுகட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. வீட்டை இடிக்கும் பணியை ராசிபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் கூலி ஆள்களைக் கொண்டு ஒரு வாரமாக செய்து வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் மேற்புற சுவரை இடிக்கும் பணியில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அலங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (23), மணி (30) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சுவரின் ஒருபக்கம் சரிந்து விழுந்ததில் உதயகுமாரும், மணியும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினா்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து வந்த நாமக்கல் தீயணைப்புத் துறை மாவட்ட உதவி அலுவலா் தவமணி தலைமையிலான 8 போ் அரைமணி நேரம் போராடி கட்டட இடிபாடுகளை அகற்றி படுகாயங்களுடன் இருந்த உதயகுமாா், மணி இருவரையும் மீட்டனா். பின்னா், அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
மாநகராட்சியின் முன் அனுமதி பெறாமல் கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்ாகவும், பொக்லைன் இயந்திரம் பயன்பாட்டில் இருந்தபோதும் தொழிலாளா்களைக் கொண்டு சுவரை இடித்ததும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று, அண்மையில் நாமக்கல் கணேசபுரத்தில் பழைய வீட்டை இடிக்கும் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.