கடன் பிரச்னை: கூலித்தொழிலாளி குடும்பத்துடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி
திருச்சியில் கடன் பிரச்னையால் எலி மருந்து பசை சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: திருச்சியில் கடன் பிரச்னையால் எலி மருந்து பசை சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி உறையூர் வாத்துக்காரர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (51). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பத்மா (40). மகள் சுவாதி ( 14), மகன் நவீன்(12).
இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர சனிக்கிழமை இரவு சாப்பிடும் போது எலி மருந்து பசையை உணவில் கலந்து உட்கொண்டுள்ளனர். இதுகுறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் வீட்டில் மயங்கி கிடந்த நால்வரையும் மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உறையூர் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.