முகப்பு
தற்போதைய செய்திகள்

ரயில்வே வாரியத்தின் தலைவராக சுனீத் சர்மா பதவியேற்பு

இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மா பதவியேற்றார்.

Updated On : 1 ஜனவரி 2021, 6:16 pm IST
சுனீத் சர்மா
பகிர்:

இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மா பதவியேற்றார்.

ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மாவை நியமனம் செய்வதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தனர்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை சுனீத் சர்மா பதவியேற்றார்.

Advertisement

Advertisement

இதற்கு முன், சுனீத் சர்மா கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ரயில்வேவின் பல துறைகளில் பணிபுரிந்துள்ளார்.

மும்பையில் பரேல் பட்டறை தலைமை பணிமனை மேலாளராக இருந்தபோது, மலை ரயில்களுக்கு குறுகிய பாதை என்ஜின்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments