கேரள சுகாதாரத்துறை அமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை
கேரளத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கேரளத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கரோனா பரவல் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கேரளத்திற்கு மத்தியக் குழுவினர் சென்றனர்.
கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் இரண்டு நாள்கள் ஆய்வு செய்திருந்த நிலையில் தற்போது மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கரோனாவை எதிர்கொள்வதில் மாநில பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, அதுசார்ந்த நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இந்தக் குழு உதவவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.