தெலங்கானாவில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு
தெலங்கானாவில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின், மத்திய அரசு தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் வெளியிட்ட செய்தியில்,
Advertisement
Advertisement
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
மேலும், கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.