தேனி: கம்பம் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
தேனி மாவட்டம் கம்பத்தில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததால், வியாழக்கிழமை சுகாதாரத்துறை நிர்வாகத்தை கண்டித்து வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததால், வியாழக்கிழமை சுகாதாரத்துறை நிர்வாகத்தை கண்டித்து வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி சுகாதார பிரிவில் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர் மற்றும் ஒப்பந்த பணியாளர் என இரண்டு பிரிவாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் 90 பேருக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதுபற்றி சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது விரைவில் சம்பளம் வழங்குவதாக தெரிவித்து இழுத்தடித்து வந்தனராம். வியாழக்கிழமை வேலைக்கு வருவதற்காக நகராட்சி அலுவலக வளாகத்திற்கு வந்த துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள், சம்பளம் வழங்காவிட்டால் வேலைக்கு செல்ல மாட்டோம் என்று கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
Advertisement
Advertisement
ஒப்பந்த பணியாளர்களிடம் சுகாதாரத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது. பின்னர் பாதுகாப்புக்கு வந்த போலீசார் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் நகராட்சி வளாகத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறவும், துப்புரவு தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறி வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
வேலை நிறுத்தம் பற்றி ஆதித்தமிழர் தூய்மை பணியாளர் சங்கம் தலைவர் மணி கூறும்போது: 12 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 140 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி 90 பேர் மட்டும் வேலை செய்கின்றனர். 50 பேர்கள் வந்ததாக கூறி சம்பளத்தை எடுத்துக்கொள்கின்றனர்.
கூடுதல் ஊழியர்கள் என்று சொல்லி குறைவான ஊழியர்களை நியமித்ததால், நகராட்சி பகுதிகளில் குப்பை சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இருக்கின்ற ஊழியர்களுக்கே சம்பளம் கடந்த 2 மாத காலமாக வழங்கவில்லை. சம்பளம் வழங்கினால் உடனடியாக பணிகளை தொடங்குவோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.