சாதாரண பெண்ணின் கனவு... தொகுப்பாளினியின் வைரல் பதிவு!
செய்தி வாசிப்பாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் அர்ச்சனா.
சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளருமான அர்ச்சனா தனது நீண்ட நாள் கனவு நனவானது குறித்து சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1999-ல் செய்தி வாசிப்பாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய அர்ச்சனா, பின்னர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். படிப்படியாக பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, தற்போது முதன்மை தொகுப்பாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
சன் தொலைக்காட்சியில் காமெடி டைம், இளமை புதுமை, விஜய் தொலைக்காட்சியில் நம்ம வீட்டு கல்யாணம், ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர் ஸ்டார், சூப்பர் மாம் போன்ற நிகழ்ச்சிகள் இவர் தொகுத்து வழங்கியதில் மிகவும் பிரபலமானவை.
சின்னத்திரை தொடர்களிலும் நடிக்கத் தொடங்கிய அர்ச்சனா, இதுவரை 6 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான டாக்டர் படத்திலும் அர்ச்சனா நடித்திருந்தார்.
இதனிடையே தனது கனவு காரை தற்போது அவர் வாங்கியுள்ளார். புதிய காரை தனது குடும்பத்துடன் சென்று வாங்கியதை விடியோவாக பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, எங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கனவை துரத்துவதிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் என் சகோதரியும் கார் ஓட்டக் கற்றுக்கொண்ட நாள்களில், பென்ஸ் காரில் எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அப்பாவின் நீண்டநாள் கனவு.
மீடியாவில் 25 ஆண்டுகள் ஆகின்றன. கனவுகளை விரட்டிய 24 ஆண்டு உழைப்பின் பலனாக அப்பா எங்களுக்காக கண்ட கனவை நனவாக்கியுள்ளோம். அவளும் நானும் சேர்ந்து வானத்தை நோக்கி கத்த வேண்டும், நாங்கள் கனவை நனவாக்கிவிட்டோம் அப்பா என்று.
எல்லா சூழல்களிலும் உறுதுணையாக இருந்த கணவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அர்ச்சனாவின் இந்த பதிவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் சித்தார்த், வாணிபோஜன், ரம்யா பாண்டியன், கிரேஸ் கருணாஸ் என பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.