FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தல் - முன்னணி நிலவரம்!

அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை - காலை 8.30 மணி நிலவரப்படி, முன்னணி நிலவரம்!

2 ஜூன் 2024, 1:00 pm IST
பகிர்:

மக்களவைத் தேர்தலுடன், பேரவைத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அருணாச்சலில் 60 பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

காலை 8 மணி நிலவரப்படி, அருணாச்சல் பிரதேசம் (மொத்த தொகுதிகள் 60) வாக்கு எண்ணிக்கை - முன்னணி நிலவரம்:

பாஜக --> 36 இடங்கள், 10 இடங்களில் வெற்றி

காங்கிரஸ் --> 1

என்பிபி --> 6

இதர கட்சிகள் --> 6

அருணாச்சல் பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி பாஜக 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில்,மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்றும், பீமா காண்டு மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

சிக்கிம் (மொத்த தொகுதிகள் 32) வாக்கு எண்ணிக்கை - முன்னணி நிலவரம்:

எஸ்.கே.எம் --> 29 இடங்கள்

எஸ்.டி.எஃப் --> 1 இடம்

பாஜக --> 0 இடம்

காங்கிரஸ் --> 0

இதர கட்சிகள் --> 0

சிக்கிமில் 29 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி முன்னிலையில் உள்ளதால் அதன் தலைவர் பிரேம் சிங் மீண்டும் முதல்வர் ஆகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments