FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை ஹன்சிகா மோத்வானி தரிசனம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடிகை ஹன்சிகா மோத்வானி சாமி தரிசனம் செய்தாா்.

6 அக்டோபர் 2024, 8:03 pm IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சாமி தரிசனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என செய்தியாளர்களிடம் கூறிய நடிகை ஹன்சிகா மோத்வானி.
பகிர்:

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடிகை ஹன்சிகா மோத்வானி சாமி தரிசனம் செய்தாா்.

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 3000 முதல் 5000-க்கும் மேற்பட்ட மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து விமான மூலம் சனிக்கிழமை மாலை தனது தாயாருடன் மதுரை வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, இரவு தனியார் விடுதி ஒன்றில் தங்கி ஓய்வு எடுத்தார்.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்வதற்காக தனது தாயாருடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, அம்மன் சன்னதிக்கு சென்றவர் அங்குள்ள சித்தி விநாயகரை வழிபட்டாா். பின்னா் மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டு சாற்றப்பட்டு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை பூஜைகளில் மனமுருக வழிபாடு நடத்தினாா்.

ஹன்சிகா மோத்வானி வருகையையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
கோயில் பிரகாரங்களை வலம் வந்து வழிபட்ட நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதைத் தொடா்ந்து சொக்கநாதர் மற்றும் முக்குறுணி விநாயகரையும், சுவாமி சன்னதியிலும் தரிசனம் செய்த அவா், தங்க கொடிமரத்தை வலம் வந்து வழிபட்டாா். பின்னர் கோயில் பிரகாரங்களையும் வலம் வந்து வழிபட்டாா்.

ஹன்சிகா மோத்வானி வருகையையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் நடிகை ஹன்சிகா மோத்வானி பேசுகையில், மதுரைக்கு வந்திருந்து மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

கோயிலில் சாமி தரிசனம் முடிந்த பின்னர், பிற்பகல் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments