முகப்பு
தற்போதைய செய்திகள்

சினேகன் - கன்னிகா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்!

பாடலாசிரியர் சினேகன் - நடிகை கன்னிகா தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

Updated On : 31 ஜனவரி 2025, 3:04 pm IST
பகிர்:

பாடலாசிரியர் சினேகன் - நடிகை கன்னிகா தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

இவர் எழுதிய பாடல்களான ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஞாபகம் வருதே மற்றும் ராம் படத்தில் இடம் பெற்றிருந்த ஆராரிராரோ பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களாகும்.

Advertisement

Advertisement

சினேகன் திருமணம் செய்துகொண்ட நடிகை கன்னிகா, சன் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண வீடு' தொடரில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் 'தேவராட்டம்', 'ராஜவம்சம்' படங்களிலும் பிரதான வேடங்களில் நடித்துள்ளார்.

சினேகனுக்கும், கன்னிகாவுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, சினேகன் - கன்னிகா தம்பதியினர், "விரைவில் நாங்கள் அப்பா - அம்மா ஆகபோகிறோம்" என்று தெரிவித்து இருந்தனர்.

இவர்கள் சீமந்த விழாவில் எடுத்துகொண்ட புகைப்படங்கள், விடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், சினேகன் - கன்னிகா தம்பதியினர் தங்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

அவர்களின் பதிவில், "இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது... தாயே எந்தன் மகளாகவும் .. மகளே எந்தன் தாயாகவும் ... இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள்.

இதயமும்,மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது ... உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்." என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments