முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

மணிப்பூர் இரண்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 10 மே 2025, 10:10 am IST
கோப்புப்படம்
பகிர்:

இம்பால்: மணிப்பூர் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தென்னௌபால் மாவட்டத்தில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே ஒரு தனி நடவடிக்கையில் குறைந்தது மூன்று துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தடைசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் (பி) இரண்டு தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள உரிபோக் கோயிஸ்னம் லெய்காய் பகுதியில் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள சேக்மாயில் ஒரு வாடகை வீட்டில் இருந்து சட்டவிரோத மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை ஒரு தனி நடவடிக்கையில், தென்னௌபால் மாவட்டத்தில் உள்ள டி மினோ கிராமத்திற்கு அருகில் இரண்டு நபர்களிடமிருந்து ஒரு ஏகே56 துப்பாக்கி மற்றும் ஒரு ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கி, ஆறு ஐஇடிகள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் உள்பட மூன்று அதிநவீன துப்பாக்கிகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இனமோதல் வெடித்ததில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இனமோதல் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு கலவரம் மற்றும் வன்முறைகளின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பிப்ரவரி 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments