ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு
ரஷியாவின் கம்சட்கா கிழக்கு கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது தொடர்பாக...
கம்சட்கா: கம்சட்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷியாவின் கம்சட்கா கிழக்கு கடற்கரை பகுதியில் 25 கி.மீ ஆழத்தில் புதன்கிழமை அதிகாலை 4.58 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது. நிலநடுக்கம் பூமிக்கடியில்10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை இதே பகுதியில் 10 கிமீ ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிர் சேதங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கை குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பப் பகுதியில் பல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
கம்சட்கா தீபகற்பம் பசிபிக் மற்றும் வட அமெரிக்க நெருப்பு வளையத்தின் (டெக்டோனிக் தகடுகள்) சந்திப்புப் புள்ளியாக இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம் போன்றவை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
கம்சட்காவில் 2025 ஜூலை 30 இல் மிகவும் பேரழிவு தரக்கூடிய நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவாகியிருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான நிலநடுக்கங்களில் மிகப்பெரிய அதிர்வாகும். இது பல நாடுகளை பாதித்தது. இந்த நிலநடுக்கம் கடல் பகுதியில் ஏற்பட்டதால் அதிக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதன் பின்னர், ஆகஸ்ட் 3 ஆம் தேதி, கம்சட்காவின் குரில் தீவுகளுக்கு அருகே 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையில், செப்டம்பர் 13 ஆம் தேதி, கம்சட்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்குப் பிறகு இங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
An earthquake of 6.1 rattled off East Coast of Kamchatka, a statement by the National Center for Seismology (NCS) said on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.