மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு
மியான்மரில் வியாழக்கிழமை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து...
மியான்மரில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது
மியான்மரில் வியாழக்கிழமை (ஜூன் 4) அதிகாலை 7.10 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 126 கிலோமீட்டர் ஆழத்தில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
ஆழமற்ற நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக ஆபத்தானவை. ஏனெனில், ஆழமற்ற நிலநடுக்கங்களில் இருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பிற்கு குறைந்த தூரமே பயணிக்கும். இதன் விளைவாக, தரை அதிர்வு அதிகமாகவும், கட்டமைப்பு சேதங்கள் அதிகமாகவும், உயிரிழப்புகள் அதிகமாகவும் ஏற்படுகின்றன.
மியான்மர் அதன் நீண்ட கடற்கரையோரம் மிதமான மற்றும் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகளால் ஏற்படும் அபாயங்களுக்கு ஆளாகக்கூடியது.
மியான்மர், செயலில் உள்ள புவியியல் செயல்முறைகளில் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் நான்கு டெக்டோனிக் தட்டுகளுக்கு இடையே (இந்திய, யூரேசியா, சுந்தா மற்றும் பர்மா தட்டுகள்) இடையில் அமைந்துள்ளது. பூமியின் நிலப்பரப்புக்கு கீழே உள்ள டெக்டோனிக் தட்டுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் பூமியின் மேலே, அதிர்வு உண்டாகிறது. இதனால் மியான்மர் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
An earthquake of magnitude 3.9 hit Myanmar on Thursday, as reported by the National Centre of Seismology
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.