குன்னூரில் மண்சரிவு: நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்ப்பு!
குன்னூர் சுற்றுவட்டராப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சாரிவால் வீடு சேதமடைந்தது.
நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டராப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சாரிவால் வீடு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டராப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்துள்ளது.
குன்னூர் காந்திபுரத்தில் மழைக்கு சனிக்கிழமை குணசேகரன் என்பவரது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அப்போது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
காந்திபுரம் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டுமானப்பணி நடப்பதால் மண்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டு, ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா். மீட்பு உதவிக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Landslide in Coonoor: Fortunately, an accident was avoided!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.