முகப்பு
தற்போதைய செய்திகள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ வலியுறுத்தியது குறித்து...

Updated On : 15 ஏப்ரல் 2026, 2:57 pm IST
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி: தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்பு, கூட்டாட்சிக்கு எதிரானது. இதனை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கவும், நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டுவர மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

Advertisement

Advertisement

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் அவசர அவசரமாக இதை கொண்டு வருகிறார்கள். பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். ஆனால் தொகுதி மறுவரையை என்கிற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தான் பாதிக்கப்படும்.

மசோதா நிறைவேற்றப்படாது

2011 மக்கள் தொகை கணக்கின்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார்கள். அப்படி செய்யும்போது அது மிகப்பெரிய பாதிப்பை தான் ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாது என்கிற நம்பிக்கை உள்ளது.

ஏற்கனவே பாஜக ஆளாத மாநிலங்களுக்கு உரிய திட்டங்கள், நிதி வழங்கப்படுவதில்லை. கலாசார திணிப்பு, மொழி திணிப்பு என எல்லா திணிப்புகளை மேற்கொண்டு இருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் தான் சிறிதளவாது அதை காக்க முடிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் அதையும் செய்ய முடியாது

கூட்டாட்சிக்கு எதிரானது

தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயகத்திற்கு, அரசியல் சாசனத்திற்கு கூட்டாட்சிக்கு எதிரானது. மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக நிறைவேற்றியது தென் மாநிலங்கள்.

பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் இதனை எதிர்க்கும் நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். இதை வைத்து ஓட்டு வாங்கும் முயற்சி இல்லை.

மக்களின் பிரதிபலிப்பு

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை என்பது மக்களின் பிரதிபலிப்பாக உள்ளது. தொகுதி மறுவரையால் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ள மாநிலங்கள் தான் பாதிக்கப்படும்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். மக்களின் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது.

உலகின் குற்றங்களின் தலைநகரம் தில்லி

இங்கு சட்டம்-ஒழுங்கு சரியில்லை, தமிழ்நாடு குற்றங்களின் தலைநகராக மாறிவிட்டது என வடமாநிலத்தில் இருந்து வந்த பாஜக தலைவர் பேசுகிறார். ஆனால் தில்லியில் தான் அதிக குற்றங்கள் நடக்கிறது. உலகின் குற்றங்களின் தலைநகராக தில்லி மாறியுள்ளது.

கூட்டம் வாக்காக மாற வாய்ப்பில்லை

விஜய் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை. அவர் செல்லும் இடங்கள் எல்லாம் அதிகயளவு கூட்டம் வருவது உண்மைதான். ஆனால் அது வாக்காக மாற வாய்ப்பில்லை.

விஜய்க்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு மறைமுக ஆதரவாக போய்விடும் என அவரை ஆதரிக்கும் சிலரே சிந்திக்கிறார்கள்.

எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது

விஜய் 15 சதவீதம் வாக்குகள் வாங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. அதனால் நடைபெற இருக்கும் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. விஜய்க்கு முதல் தலைமுறை வாக்குகள் தான் உள்ளது. ஆனால் அவர்கள் வாக்களிக்க வருவார்களா என்பதே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் நாளன்று சுற்றுலா சென்று விடுவார்கள்.

அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லை

எம்ஜிஆரையும் விஜய்யையும் ஒப்பிட முடியாது. எம்ஜிஆர் நீண்ட காலம் திமுகவில் பயணித்து தனிக்கட்சி தொடங்கியவர். ஆனால் விஜய் கட்சியில் அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லை, அங்கு கட்டமைப்பும் இல்லை என துரை வைகோ கூறினார்.

summary

ADMK Must Also Raise Its Voice Against Constituency Delimitation MDMK Durai Vaiko Urges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.