தோழர் நல்லகண்ணு புகழ் வாழ்க! - ப.சிதம்பரம்
தோழர் நல்லகண்ணு நினைவிற்கு நான் தலை வணங்கி அஞ்சலி செலுத்துகிறேன். அவரது புகழ் வாழ்க என ப.சிதம்பரம் கூறியது...
தோழர் நல்லகண்ணு நினைவிற்கு நான் தலை வணங்கி அஞ்சலி செலுத்துகிறேன். அவரது புகழ் வாழ்க என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு மறைவை அடுத்து அவரது உடல் சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
ப.சிதம்பரம் இரங்கல்
தோழர் நல்லகண்ணு நினைவிற்கு நான் தலை வணங்கி அஞ்சலி செலுத்துகிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவு நம் எல்லோரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய நினைவிற்கு நான் தலை வணங்கி அஞ்சலி செலுத்துகிறேன்
அரசியல் நாகரிகம், அப்பழக்கில்லாத ஒழுக்கம், சித்தாந்தப் பற்று, சலியாத உழைப்பு மற்றும் காந்திய எளிமை ஆகியவற்றின் சின்னமாக நூறாண்டுக்கு மேல்
வாழ்ந்து தோழர் நல்லகண்ணு அவர்கள் சரித்திரம் படைத்தார் என்று சொல்ல விரும்புகிறேன்
தோழர் நல்லகண்ணு அவர்களின் புகழ் வாழ்க! என்று அவர் கூறியுள்ளார்.
I bow my head and pay tribute to the memory of Comrade Nallakannu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.