தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை: அண்ணாமலை
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை என்று அண்ணாமலை தெரிவித்தது குறித்து...
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய இயக்கம் குறித்த அறிவிப்பை சமூக ஊடகப் பக்க நேரலையில் வெளியிட்டு பேசிய அண்ணாமலை,
என்னுடைய பாதை வேறு; வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டும்; எனக்கு இலக்குகள் பெரியதாக உள்ளன; நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும்; ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இருக்கிறேன் என்பதை பாஜக தலைவர்களிடம் பண்போடு சொல்லிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளேன்.
Advertisement
Advertisement
எனது பெரிய ஆசை
ஒரு புதிய இயக்கம், ஒரு புதிய அரசியல் இயக்கம், ஒரு புதிய பரிமாணத்தோடு இயங்கக்கூடிய வகையில்தான் நமது இயக்கத்தை தொடங்க வேண்டும்; எல்லோரும் சேர்ந்து, இணைந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசை.
அரசியலுக்கு வருவதே அரிது
எனது அரசியல் பாதை எளிதானது அல்ல. நீண்ட நெடியது. சாதாரணமாக வந்துவிடவில்லை. வளைந்து, நெளிந்து நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். இதுபோன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது. ஏனெனில், நாம் ஒதுங்கிக் கொள்வோம்; வர மாட்டோம்.
தமிழர் பண்போடு வெளியேறியுள்ளேன்
என்னுடைய பாதையும்கூட 2009 இல் விஜயகாந்த்தின் தேமுதிகவில் மூன்று மாத காலம் இருந்து பயிற்சி பெற்று, பின்னர் 10 ஆண்டு காலம் கழித்து பாஜகவில் இணைந்து தமிழ்நாடு மக்களுக்காக அங்கு 6 ஆண்டு காலம் பணியாற்றிய நிலையில், எந்த இடத்தில் இணைந்தேனே, அதே இடத்தில் மரியாதைதோடு சொல்லிவிட்டு, தமிழர் பண்போடு வெளியேறியுள்ளேன். தற்போது தனித்துவமான முறையில் நம்முடைய புதிய இயக்கத்தை மக்கள் முன் வைக்க வேண்டும் என்பதற்காக நான் உங்கள் முன் நிற்கிறேன். வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.
மாறுவோம்... மாற்றுவோம்
தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும். வழிபாட்டுப் பாணி(தனிநபர் பிம்பம்) அரசியல்(Cult Politics)இல் இருந்து வெளியே வர வேண்டும். நம் கட்சியில் நிரந்தரத் தலைவர், நிரந்த எம்.எல்.ஏ., எம்.பி இல்லை. நமது இயக்கத்தின் கொள்கையே... மாறுவோம்... மாற்றுவோம்.
அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும்
முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து. பின்னர் அரசியல் சொல்லிக்கொடுத்து கட்சியாக மாற்றுவோம். தமிழ்நாட்டில் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் எனது விருப்பம். சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டுவருவேன். அதற்கு சிறுதுகாலம் அவகாசம் தேவை. சமரசமில்லாத கொள்ளை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே என இலக்கு.
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை
தமிழ்நாடு குறித்து தன்னுடைய பார்வையும், பாஜக மூத்த தலைவர்கள் பார்வையும் ஒன்றாக இல்லை. தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இது நமது இயக்கம் என்ற பெயரில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான https://wetheleader.org என்ற இணையதள முகவரியையும் வெளியிட்டுள்ளார்.
இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நமது இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.