தங்கம் விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?
கடந்த இரண்டு நாள்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது குறித்து...
சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மாா்ச் 9-இல் பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும், மாா்ச் 10-இல் பவுனுக்கு 800 உயா்ந்து ரூ.1,20,400-க்கும் விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.15,120-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.1,20,960-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, வியாழக்கிழமை சற்று குறைந்திருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இன்றைய தங்கம் விலை நிலவரம்
அதன்படி, கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
அதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
Gold and Silver price situation in Chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.