இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: ஜூன் 12 விலை நிலவரம்?
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை நிலவரம் குறித்து...
ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.5,600 குறைந்த நிலையில், ஒரே நாளில் வெள்ளிக்கிழமை(ஜூன் 12) பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்துது ரூ.1,10,400-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு நகை பிரியர்களை கவலை அடைந்துள்ளனர்.
சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் எதிரொலியாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து, அதன் விலையும் சரிந்து வருகிறது.
அந்த வகையில், நிகழ் மாதம் தொடக்கத்தில் (ஜூன் 1) பவுன் ரூ.1,16,000-க்கு விற்பனையானது. பின்னா், தொடா்ந்து விலை குறைந்த வண்ணம் இருந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கும், பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000-க்கும் விற்பனையானது. 2 நாள்களில் பவுனுக்கு ரூ.5,600 குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.13,800-க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,10,400-க்கும் விற்பனையானது.
இந்த விலை உயர்வு நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை
அதேபோன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.