தங்கம் விலை உயர்வு, வெள்ளி விலை?- ஜூலை 18 நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.1,05,080-க்கு விற்பனையாவது தொடர்பாக...
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.1,05,080-க்கு விற்பனையாகிறது.
இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜூலை 13, 14 தேதிகளில் மொத்தம் பவுன் ரூ.1,200 குறைந்தது. அதையெடுத்து, ஜூலை 15-இல் பவுனுக்கு ரூ.240 உயா்ந்தும், ஜூலை 16-இல் பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.
இந்த சூழலில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.235-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சனிக்கிழமை விலை சற்று உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.13,135-க்கும், பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனையாகிறது.
ஆனால், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.235-க்கும் விற்பனையாகிறது.
Today Gold price rise-what about the price of silver?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.