முகப்பு
தற்போதைய செய்திகள்

பிளஸ் 2 தேர்வு  முடிவு: கடலூர் மாவட்டம் 95.57% தேர்ச்சி!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் 19 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது குறித்து...

கடலூர் மாவட்டம் 95.57% தேர்ச்சி - கோப்புப்படம்
பகிர்:

நெய்வேலி: பிளஸ் 2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் 19 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 117 அரசு பள்ளிகள், 30 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 101 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 248 பள்ளிகளில் இருந்து 14,919 மாணவர்கள் 14,478 மாணவிகள் உள்பட்ட மொத்தம் 28,518 மாணவர் மாணவிகள் தேர்வு எழுதினார்.

இவர்களில் 14,040 மாணவர்களும், 14,478 மாணவிகளும் என மொத்தம் 28,518 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 94.11%, மாணவிகளுக்கு 97.03% மொத்த தேர்ச்சி 95.57 சதவீதம். மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.23 சதவீதம்.

Advertisement

Advertisement

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 2025-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 96.06 சதவீதமும், நிகழாண்டு 95.57 சதவீதமாக குறைந்துள்ளதை அடுத்து இந்த ஆண்டு 19-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 10 -ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Plus 2 Exam Results: Cuddalore District Achieves 95.57% Pass Rate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments