வீடு எப்போதும் அழகாக இருக்க, இந்தத் தவறை மட்டும் செய்யக்கூடாது!
வீடு எப்போதும் அழகாக இருக்க, இந்தத் தவறை மட்டும் செய்யக்கூடாது!
அனைவருக்கும் வீடு எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதனை அழகாகவே வைத்துக் கொள்வது எப்படி என்று தெரிந்திருக்காது.
அழகாக வைத்துக் கொள்ள பெரிய வேலைகளை செய்யாவிட்டாலும், சில தவறுகளை செய்யாமல் இருக்கலாம்.
வீட்டை அலங்கரிக்கும்போது பலரும் செய்யும் தவறுகள்.. அதிகப்படியான அலங்காரப் பொருள்கள்தான். சுவர்களில் ஓவியங்கள், படங்கள், விளக்குகள், அதிகப்படியான நாற்காலிகள், மேஜைகள் எனப் போட்டு அழகைக் கெடுத்துவிடுவார்கள்.
Advertisement
Advertisement
பெரிய வரவேற்பறையாக இருந்தால்கூட, அதில் ஒரு சில பொருள்கள், அழகிய வேலைப்பாடுடன் கொண்ட கலைப் பொருள்கள் இருந்தால்தான் ரசிக்க முடியும். அதிகமாக இருக்கும் போது அழகு இதற்குள் ஒளிந்துகொள்ளும்.
சிறிய இடமாக இருந்தாலும் அதனை வெற்றிடமாக வைத்தாலே அழகாக இருக்கும். அதனை அழகுபடுத்துவதாகக் கருதி நிரப்பிவிடக்கூடாது.
நிறக்கலவைகள்
ஒரு அறையை மிக அழகாக அலங்கரிக்கும்போது நிறங்களை தெரிவு செய்வதும் அவசியம். மிக வெளிர் நிற அறைக்குள் அதற்கு ஏற்ற வெளிர் நிற பொருள்களால் அலங்கரித்தால், பார்க்க அருமையாக இருக்கும்.
அதைவிடுத்து, பச்சை, கருப்பு, நீலம் என வண்ண வண்ண நிறங்களில் ஒவ்வொன்றையும் வாங்கி அடுக்கிவிட்டால், பார்ப்பதற்கு மோசமாகவே இருக்கும்.
ஒரே ஒரு அறை..
ஒரே அறைக்குள் எத்தனை நாற்காலிகளை நிரப்ப வேண்டுமோ அத்தனையும் வாங்கி நிரப்பிவிடக் கூடாது. மூன்று அல்லது நான்குபேர் அமரும் ஒரு நீண்ட இருக்கை இருக்குமானால், அதனுடன் ஒரே ஒரு தனி இருக்கை போடலாம். அதைவிடுத்து, அதற்கு எதிரே பெரிய இருக்கை, சிறு இருக்கைகள் என போட்டால், அறையைப் பார்க்கவே கூட்ட அரங்குபோல மாறிவிடும்.
ஒவ்வொரு அறைக்கும் சிறப்பு விளக்குகள்
அறைகளின் தேவைக்கு ஏற்ப விளக்குகளை தெரிவு செய்ய வேண்டும். படுக்கை அறையில் மங்களான, மஞ்சள் நிற விளக்கு, படிக்கும் அறைக்கு நல்ல வெள்ளை நிற விளக்குப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
வரவேற்பறை பொதுவாக மங்கலாக இருக்க வேண்டாம்.
மூடிய அலமாரிகள்
சார்ஜர், ஒயர்கள் போன்றவை வெளியில் தெரியும்படி இருக்காமல், மூடிய சிறிய அலமாரிகளுக்குள் இருப்பது போல வைத்தால் சிறப்பாக இருக்கும்.
ஜன்னல், கதவுகளுக்கு சரியான அளவில் திரைச்சீலைகளை போடுவதும் அவசியம். அதன் நிறமும் அழகும் முக்கியம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை சுத்தப்படுத்த வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.