FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ.2 லட்சம் சம்பளம், தோழிகள் கூடாது, 24x7 லைவ் லொகேஷன்: பெண்ணின் வைரல் பதிவு! ஆண்கள் பாவம்தான்!

ரூ.2 லட்சம் சம்பளம், தோழிகள் கூடாது, 24x7 லைவ் லொகேஷன் என வருங்கால மாப்பிள்ளை குறித்த பட்டியல் வைரலாகியிருக்கிறது.

கடற்கரைத் திருமணம் - படம்: TNIE
பகிர்:

பல நூற்றாண்டு காலமாக வீடு, கார், நகை என வரதட்சிணைக் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் கட்டளை போட்ட காலம் மலையேறிவிட்டது, பெண்களே நேரடியாக மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கும் காலம் வந்து சில காலம் ஆகிறது.

அண்மையில், வேதிகா என்ற பெண் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், வருங்கால கணவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என ஒரு நீண்டப் பட்டியலை வெளியிட, அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவுக்கு, பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒரு தரப்பாகவும், ஆண்களும், இதுபோன்ற பல விதிமுறைகளால் தங்களது மகனுக்கு பெண் கிடைக்காமல் அல்லாடும் பெற்றவர்கள் ஒரு அணியாகவும் திரண்டு தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

தன்னுடைய வருங்கால கணவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என அவர் ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும் தளர்வுகளுக்கு உட்பட்டது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வருங்கால கணவர் கண்ணியமாக இருக்க வேண்டும், மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்க வேண்டும், பார்க்க அழகாக, 6 அடி உயரத்தில் இருப்பது, சமையல் தெரிந்த, சமூக வலைத்தளத்திலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும், பெண் தோழிகள் இருக்கக் கூடாது, எங்குச் சென்றாலும் கேட்டுக்கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும், 24x7 லைவ் லொகேஷன் ஆன் செய்திருக்க வேண்டும், அடிக்கடி வெளியூர் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என நீள்கிறது.

எங்கே இதுபோன்ற ஒரு மாப்பிள்ளையை நான் காண்பேன் என்று நிறைவாகக் கேள்விக்குறியோடு முடித்திருக்கிறார்.

பலரும், அவருக்கு, உங்களது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்றும், இதுபோன்ற ஒருவர் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இதுவரை அவருக்கு 600 பேர் கருத்துகளை பதிவிட, அவரது பதிவுக்கு 400 பேர் லைக் செய்திருக்கிறார்கள்.

இன்று எக்ஸ் பக்கத்தில் இவரது பதிவு வைரலாகியிருக்கிறது. உண்மையில் பார்த்தால், இவரது விதிகள் என்னவோ குறைவாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. காரணம், மகனுக்கு தற்போது பெண் தேடும் பெற்றோரிடம் கேட்டால் தெரியும், பெண் வீட்டார் அவர்களுக்கு வைக்கும் கட்டளைகளில், சொந்த வீடு இருக்க வேண்டும், அதுவும் முதல் தளத்தில்தான் இருக்க வேண்டும், தாய் - தந்தை உடன் இருக்கக் கூடாது, சகோதரிகளே இருக்கக் கூடாது என்பது போன்ற பட்டியல்களும் நீள்வதாகக் கூறிப் புலம்புவார்கள்.

summary

2 lakh salary, no female friends, 24x7 live location: A woman viral post! Men really have it tough!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments