முகப்பு
அழகிய இல்லம்

என்ன, சமைப்பதை எளிமையாக்குமா எடைபார்க்கும் இயந்திரம்? பட்ஜெட் விலையில்!

வீட்டின் சமையலறையில் எடைபார்க்கும் கருவி இருப்பது எத்தனை பயனளிக்கும் என்பது பற்றி..

Updated On : 22 ஜூன் 2026, 3:47 pm IST
வீட்டின் சமையலறை - ANI
பகிர்:

வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்ப கண்களாலே அளவிட்டு பெண்கள் சமைத்து வந்தனர். இப்போது நாமோ யூடியூப் காணொலிகளைப் பார்த்து சமைக்கிறோம்.

இதனால், எப்படி மாற்றி மாற்றி சமைத்தாலும் அந்த சுவையில் ஏதோ ஒரு சிறு பிழை வந்துவிடுகிறது.

இதற்கு, சமையல் நிபுணர்களின் அறிவுரையாக இருப்பது மளிகை பொருள் எடைபார்க்கும் கருவிகளை வைத்திருப்பது. அதாவது, ஒரு நான்கு பேருக்கு எத்தனை கிராம் அரிசி, ரவை என அளவிட்டு ஒரு முறை செய்து பழகிவிட்டால், அடுத்தடுத்து சமைக்கும்போது மிக எளிதாக இருக்கும் என்கிறார்கள்.

Advertisement

Advertisement

அதற்காக அனைவரும் எடை இயந்திரத்தை வாங்கி அதில் வைத்து சரிபார்த்துத்தான் சமைக்க வேண்டும் என்பதில்லை. சமையலில் ஏதோ ஒன்று குறையிருந்து கொண்டேயிருக்கிறது. ஏதேனும் செய்து சரி செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு மட்டுமே இந்த யோசனை.

ஏன் என்றால், பல ஆயிரங்கள் கொடுத்து எடை இயந்திரங்களை வாங்க வேண்டிய நிலை இப்போது இல்லை.

சந்தைகளில் ரூ.1000கூட அல்ல, ரூ.800 விலையில்கூட நல்ல தரமான எடை இயந்திரங்கள் வந்துவிட்டன. இவற்றை வாங்கி வந்து பயன்படுத்தி பயனடையலாம்.

எடை இயந்திரங்கள் வெறும் சமையலுக்கு மட்டுமில்லை, டயட் இருப்பவர்கள் எத்தனை கிராம் பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதனை எடை பார்த்து உணவில் சேர்க்கலாம்.

மாவு ஊறவைக்க அரிசி - உளுந்து விகிதம் சரியாக போடலாம். பிரியாணிக்கு அரிசி - கறியை அளந்து சேர்க்கலாம். வெளியில் கடைக்குச் சென்று அரைக்கும் பொருள்களை எடைபோட்டு எடுத்துச் சென்று சரியாக அரைத்து எடையோடு வந்திருக்கிறதா என்பதை சோதிக்கலாம்.

எனவே, பயனுள்ள பொருள்கள்தான்.

summary

A weighing scale for your home kitchen! At a budget-friendly price

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments