இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு யோசனை!
இரவில் உறக்கம் வர சின்ன சின்ன குறிப்புகள்
உடல் நலனில் ஏற்படும் சில சின்ன சின்ன மாற்றங்கள் கூட பெரிய நோய்களுக்கு வித்திடலாம். அதில் முதல் இடத்தில் இருப்பது உறக்கம்தான். எனவே ஒவ்வொருவரும் போதிய உறக்கத்தை உறுதி செய்வது அவசியம்.
1. உயிரைப் பற்றி கவலைப்படுபவர்களை விட, தற்போதயை நவ நாகரீக உலகில் தலை முடியைப் பற்றி கவலைப்படுவோர்தான் அதிகம். வாரம் ஒருமுறை ஒரு மூடித் தேங்காயில் பால் எடுத்து தலையில் மயிர்க்காலில் படும்படி நன்றாகத் தேய்த்து, ஊறியவுடன் குளித்து வந்தால் தலைமுடி கொட்டாது. தேங்காய் எண்ணெய் வைக்கவே மாட்டேன் என்ற சொல்பவர்களுக்கு இது உகந்த பலனளிக்கும்.
2. வசம்பை சிறிது நீர்விட்டு மை போல் அரைத்துத் தலையில் தடவி வந்தால், அரை மணி நேரத்துக்குப் பின்னர் தலையை அலசினால் பேன்கள் மடியும்.
Advertisement
Advertisement
3. இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து சிறிது தனியா சேர்த்து அரைக்க வேண்டும். அவற்றை வெந்நீரில் கலந்து வடிகட்ட வேண்டும். தேன், எலுமிச்சைச் சாறுடன் வடிகட்டிய நீரைக் கலந்து குடிக்க அஜீரணம் நீங்கி, வயிறு பசி எடுக்கும்.
4. காய வைத்த வெந்தயத்தைப் பொடியாக்கி வைத்துகொள்ளுங்கள். ஒரு டம்ளர் காய்ச்சி ஆறிய தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பொடியைச் சேர்த்து கலக்கி, அருந்த வேண்டும். தினமும் குடித்தால் சர்க்கரை நோய் நீங்கும்.
5. தேனில் பேரீச்சம்பழங்களை ஊறவைத்து, இரவு படுக்கும் முன்பு சாப்பிட்டு பாலை அருந்தினால் நல்ல பசி எடுக்கும்.
6. இரவு உறக்கம் வராமல் தவிப்பவர்கள் ஒரு கிண்ணம் சூடான பாலில் சிறிதளவு தேன் கலந்து பருக, தூக்கம் வரும்.
7. இஞ்சியைத் துண்டுகளாக்கித் தேனில் ஊற வைத்து, சாப்பிட பித்தம் நீங்கும்.
8. வயிற்றில் கிருமி இருந்தால் வேப்பங்கொழுந்துடன் வெல்லம் சேர்த்துப் பச்சடி செய்து சாப்பிடலாம்.
9. முள்ளங்கிச் சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து சாப்பிட அனைத்து வகை சிறுநீர்க் கோளாறுகளும் சரியாகும்.
10. நெல்லிச் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால், இன்சூலின் போடாமலேயே நீரிழிவு கட்டுப்படும்.
-ஆர்.ஜெ.
Tips to help you fall asleep during the night
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.