செய்திகள்

வறண்ட சருமமா? சரிசெய்ய உதவும் 5 இயற்கைப் பொருள்கள் இதோ!

DIN

குளிர் காலத்தில் சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது சாதாரணம்தான். அதிக குளிரினால் உடலில் நீரேற்றம் குறைவதனால் சருமம் வறண்டு போதல், சருமச் சுருக்கம் உள்ளிட்ட ஏற்படும். 

இந்த நேரத்தில் சருமத்தை வறண்டுபோகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். அதற்கு வீட்டில் உள்ள சில எளிய இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தலாம். 

குளிர் காலத்தில் சருமத்தை நீரேற்றம் செய்ய 3 சிறந்த மாய்சரைசர்கள் பயன்படுகின்றன. 

தேன்: சிறந்த மாய்சரைசர்களில் முதன்மையானது தேன். சில துளிகள் தேன் எடுத்து சருமத்தில் மசாஜ் செய்ய வேண்டும். மாய்சரைசராக மட்டுமின்றி சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். 

பாதாம்: வறண்ட சருமத்திற்கு பாதாம் பவுடருடன் சிறிது பால் சேர்த்து கலந்து அந்த கலவையைக் கொண்டு ஸ்க்ரப் செய்யவும். இதனால் சருமம் பளபளப்பாவதுடன் மென்மையாக மாறும். 

மஞ்சள்: ஆன்டி - ஆக்சிடன்ட் என்பதால் சருமத்தில் உள்ள கிருமிகளுக்கு எதிராகப் போராடுகிறது. மேலும் புத்துணர்வைத் தருகிறது, பொலிவடையவும் உதவுகிறது. 

கற்றாழை: தோல் சுருக்கத்தைக் குறைத்து மிகவும் வயது முதிர்வு தோற்றத்தைத் தடுக்கிறது. முகப்பருக்கள் வராமலும் தடுக்கிறது. 

பாசிப்பயறு மாவு/கடலைமாவு ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அத்துடன் சிறிது பால் அல்லது தயிர் சேர்த்து ஸ்க்ரப் செய்யவும். இதனை பேக்காகவும் போடலாம். 

இதுதவிர குளிர் காலத்திலும் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும், பழச்சாறுகளும் தொடர்ந்து அருந்தலாம், அடுத்து முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதுவும் சருமம் வறண்டு போவதைத் தடுக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT