முகப்பு
செய்திகள்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து..

Updated On : 15 ஜூன் 2026, 1:37 pm IST
மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்! - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பின்போது, அதில் நடித்த நடிகர்கள் கண்கலங்கி அழுத விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், தற்போது 850 நாள்களைக் கடந்துள்ளது.

இத்தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களின் இணைக்கு சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும், இந்தத் தொடரில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரின், படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

கடைசிநாள் படப்பிடிப்பின்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், இதில் நடித்த அனைத்து நடிகர்களும் பங்கேற்றனர். இந்தத் தொடரில் இருந்து விலகிய கமருதீனும் நிறைவு நாள் காட்சியில் நடித்தார்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், அனைவரும் மகாநதி தொடரில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பலரும் கண்கலங்கி அழுத விடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.

பலதரப்பட்ட ரசிகர்கள் கொண்ட இந்தத் தொடரின், இறுதிக்கட்ட காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

summary

A video showing the actors of the Mahanadhi series tearing up and crying during the final day of filming has gone viral on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.